சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

Added : டிச 02, 2019
Advertisement

அம்பத்துார் : நெடுஞ்சாலையை இணைக்கும், மழைநீர் வடிகாலுக்கான, சிறு பால தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்தவர், உள்ளே தவறி விழுந்து, மழை வெள்ளத்தில் மூழ்கி பலியானார்.

அம்பத்துார் அடுத்த மண்ணுார்பேட்டை, நேரு நகர், பிரதான சாலையைச் சேர்ந்தவர், ஷேக் அலி, 49; தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணி அளவில், மழையில் நனைந்தபடி, வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது, உடல் நலக்குறைவு காரணமாக, சி.டி.எச்., சாலையில் உள்ள, மழைநீர் வடியும், 10 அடி ஆழ கால்வாயின், சிறுபால தடுப்பு சுவர் மீது அமர்ந்தார்.அடுத்த சில நிமிடங்களில், நிலைதடுமாறி, கால்வாய்க்குள் தலைகீழாக விழுந்தார்.

அதைக்கண்டவர்கள், அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்தினருக்கு, தகவல் தெரிவித்தனர், சி.டி.எச்., சாலையை இணைக்கும், 60 அடி நீள கால்வாய்க்குள் விழுந்தவர், மழை வெள்ளத்தின் வேகம் காரணமாக, 15 அடி துாரத்திற்கு, இழுத்து செல்லப்பட்டார்.அப்போது, கால்வாயில், 7 அடி ஆழத்திற்கு தண்ணீர் பாய்ந்ததால், தீயணைப்பு வீரர்கள், மோட்டார் மூலம் நீரை அகற்றி, அவரை மீட்க முயன்றனர்.ஆனால், தொடர்ந்து பெய்த மழை மற்றும் மோட்டார் இயங்காததால், மீட்பு பணி தடைபட்டது.

இதையடுத்து, ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலையத்தினர் அழைக்கப்பட்டனர். மழையால் நீடித்த, போக்குவரத்து நெரிசல் காரணமாக, அவர்கள், சம்பவ இடத்திற்கு வர காலதாமதமானது. இதனால், அதிருப்தி அடைந்த, ஷேக் அலியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சாலை மறியல் செய்ய முயன்றனர்.அப்போது, அந்த இடத்தை கடந்த, மாநகர பேருந்தின், பின்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதையடுத்து, நள்ளிரவு, 12:15 மணி அளவில், ஷேக் அலியை, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டனர்.கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X