சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருமான வரி சோதனையின் போது ஊழியர் தற்கொலை

Added : டிச 02, 2019
Advertisement

அடையாறு : சென்னை, அடையாறில் உள்ள, மீன் ஏற்றுமதி நிறுவனத்தில், வருமான வரி சோதனை நடந்த போது, அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட, உடை மாற்றும் ஆபாச படங்கள் அதிகாரிகளிடம் சிக்கியதால், அவர் தற்கொலை செய்து கொண்டார் என, தெரியவந்துள்ளது.துாத்துக்குடியைச் சேர்ந்தவர் செல்வம், 50; அடையாறு, காந்திநகர், 1வது தெருவில், 'அஸ்வினி' என்ற பெயரில், மீன், இறால் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு, 15 பேர் பணி புரிகின்றனர்.இந்த அலுவலகத்தில், வடபழனியைச் சேர்ந்த செந்தில்குமார், 35, என்பவர், எட்டு ஆண்டுகளாக உதவியாளராக பணிபுரிந்தார்.

மூன்று நாட்களாக, இந்த அலுவலகத்தில், வருவான வரி சோதனை நடந்தது.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி வரை சோதனை நடத்தப்பட்டதில், சில ஆவணங்கள், கணினி, 'ஹார்டு டிஸ்க்' உள்ளிட்டவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆய்வின் போது, செந்தில்குமார் அங்கு இருந்தார்.சோதனை முடிந்து, அலுவலகத்தை பூட்டும் நேரத்தில், அவரை காணவில்லை. மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், கட்டடத்தின் மூன்றாவது மாடியில், அலுவலகபொருட்கள் வைக்கும் பாதுகாப்பு அறையின் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.அறை கதவை உடைத்து பார்த்த போது, செந்தில்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.அடையாறு போலீசார், உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: வருமான வரி சோதனைக்கும், இவரது மரணத்திற்கும் தொடர்பில்லை. ஆனால், அதிகாரிகள் கைப்பற்றிய, ஹார்டு டிஸ்கில், சில ஆபாச படங்கள் இருந்தன. செந்தில்குமார், அலுவலக அறை, உடை மாற்றும் அறை, கழிப்பறை போன்ற இடங்களில், 'ஸ்பை கேமரா' பொருத்தி, பெண் ஊழியர்களை, அவர்களுக்கே தெரியாமல், ஆபாசமாக படம் பிடித்து பதிவு செய்து வைத்துள்ளார்.

இவை, ஹார்டு டிஸ்கில்இருந்ததால், எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில், அவர் தற்கொலை செய்துள்ளார். இதில், வேறு யாருக்காவது தொடர்புள்ளதா, மரணத்திற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என விசாரிக்கிறோம். இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X