சென்னை : கலெக்டர் அலுவலகத்தில், வழக்கம்போல், இன்று குறைதீர் கூட்டம் நடக்கும் என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும், திங்கள் கிழமை, மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.இதில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.இந்நிலையில், சென்னையில் கன மழை பெய்வதால், இன்று குறைதீர் கூட்டம் நடக்குமா என, மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, வழக்கம் போல், மக்கள் குறைதீர் கூட்டம், இன்று காலை, 11:00 மணிக்கு, கலெக்டர்தலைமையில் நடக்கும் என தெரிவித்தனர்.