பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : டிச 02, 2019
Advertisement

கஞ்சா விற்றவருக்கு, 'காப்பு!'ஓட்டேரி: ஓட்டேரி, திரு.வி.க.நகரில், கஞ்சா விற்பனை நடப்பதாக, ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா, 32, என்பவர் சிக்கினார். 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.நகை திருடியவர் கைதுதுரைப்பாக்கம்: துரைப்பாக்கம், ராஜிவ் நகரைச் சேர்ந்தவர், ஐயம்பாண்டி, 30.

கடந்த மாதம், இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது, வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது. துரைப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், முகப்பேரைச் சேர்ந்த ஸ்ரீதர், 32, என தெரிந்தது. நேற்று, ஸ்ரீதரை கைது செய்த போலீசார், 8 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். அவனது கூட்டாளியை தேடி வருகின்றனர்.மோசடி பெண்களுக்கு வலைவேளச்சேரி: வேளச்சேரி, நுாறடி சாலையில், ஒரு நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம்,இரண்டு பெண்கள், நகை எடுக்க சென்றனர்.8 கிராமில், பழைய தங்க நாணயங்களை கொடுத்து, புது நகை வாங்கி சென்றனர்.

நாணயங்களை சோதித்தபோது, தங்க முலாம் பூசப்பட்டது தெரியவந்தது. கடை மேலாளர் சக்திவேல், வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.வழிப்பறி ஆசாமி சிக்கினார்செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர், முனிராஜ், 25. நேற்று முன்தினம் இரவு, இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 23, என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாய் பறித்துள்ளார். செம்மஞ்சேரி போலீசார், நேற்று, மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.ஒரே வாகனம்;

இருமுறை திருட்டுதுரைப்பாக்கம்: துரைப்பாக்கம், குமரன்குடில் நகரைச் சேர்ந்தவர், நவீன், 23; ஐ.டி., ஊழியர். நவ., 20ம் தேதி, வீட்டின்முன் நிறுத்திய, இவரது இருசக்கர வாகனம் திருட்டு போனது. துரைப்பாக்கம் போலீசார், கண்ணகி நகரை சேர்ந்த இருவரை கைது செய்து, வாகனத்தை மீட்டு ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அதே வாகனம் மீண்டும் திருடு போனது. ஏற்கனவே திருடிய நபர்கள், சிறையில் உள்ள நிலையில், இந்த முறை யார் திருடியது என, போலீசார் விசாரிக்கின்றனர்.மின் வாரிய ஊழியர் மீது தாக்கு?சங்கர் நகர்: சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர், ஜெயராஜ், 32. இவர், திருநீர்மலை மின் வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று, திருநீர்மலை பகுதியில், மின் கம்பி பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த, சுகுமார், 35, என்பவர், 'இங்கு, யாரைக் கேட்டு, மின் கம்பி பதிக்கும் பணியில் ஈடுபடுகிறீர்கள்?' எனக் கேட்டு, ஜெயராஜை தாக்கி உள்ளார்.இது குறித்து, ஜெயராஜ் அளித்த புகாரின்அடிப்படையில், சங்கர் நகர் போலீசார், சுகுமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X