சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதியதில் மகன் கண்முன் தாய் பலி

Added : டிச 02, 2019
Advertisement

பூந்தமல்லி : கன்டெய்னர் லாரி மோதியதில், மகன் கண்முன் தாய் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.

பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம், படூர்மேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர், கஜேந்திரன், 60. இவரது மனைவி அம்சா, 54.இவர்களது, மகன் விஜயன், 32; ஆட்டோ ஓட்டுனர். இவர், தாய் அம்சாவுடன், நேற்று, இருசக்கர வாகனத்தில், பூந்தமல்லி - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியதில், இருவரும் கீழே விழுந்தனர்.

அதில், லாரி ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே, அம்சா பலியானார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி ஓட்டுனரான, செங்கிஸ்கண்ணா, 34, என்பவரை கைது செய்தனர். லாரி மோதி மகன் கண்முன்னே, தாய் பலியானது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X