புழல் : மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணனை காணாமல், தம்பி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புழல், லட்சுமிபுரம், வ.உ.சி., தெருவைச்சேர்ந்தவர் லிங்கமூர்த்தி, 39; தனியார் நிறுவன ஊழியர். இவர், மனநலம் பாதிக்கப்பட்ட, தன் அண்ணன் ரகு, 44, என்பவரை பராமரித்து வந்தார். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரகு, சமீபத்தில் காணாமல் போனார்.அவரை தேடி அலைந்த லிங்கமூர்த்தி, அண்ணன் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், கடிதம் எழுதி வைத்து, நேற்று மாலை,வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.