பொது செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த சுவர்... மாயமாகும் தீர்த்தம்! திருமுருகன்பூண்டி கோவில் பாதுகாப்பு கேள்விக்குறி

Added : டிச 02, 2019
Advertisement
 பழுதடைந்த சுவர்... மாயமாகும் தீர்த்தம்! திருமுருகன்பூண்டி கோவில் பாதுகாப்பு கேள்விக்குறி

அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டி கோவிலில், தீர்த்தங்கள் மாயமாகிவருகின்றன. பழுதடைந்துள்ள சுவர்களால், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.திருமுருகன்பூண்டியில் ஆயிரத்து 500 ஆண்டு பழமையான திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள தீர்த்த கிணற்றில் குளித்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவர் என்பது ஐதீகம்.சுற்றுச்சுவர் பல இடங்களில், சிதைந்து, கீறல் விட்டு காணப்படுகிறது. கோவில் வளாகத்தில் உள்ள முயங்கு பூண் வள்ளியம்மை கோவில் கட்டடம் சிதைந்து காணப்படுகிறது. இங்கு ஏழு தீர்த்த கிணறுகள் உள்ளன.இதில் சில தீர்த்த கிணறுகள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளது. ஞான தீர்த்தம், அக்னி தீர்த்தம் துார் வாரப்படாமல் மோசமாக உள்ளது.தீர்த்த கிணறு பயன்பாடு இல்லாததால், குணமடைவதற்காக, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இங்கு அழைத்து வருவது, குறைந்து விட்டது. கோவில் முழுக்க, மத்திய தொல்லியல் துறை கட் டுப்பாட்டில் உள்ளதால், அறநிலையத்துறை சார்பில் கோவில் பராமரிப்பு, பாதுகாப்பு, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதில் தொல்லியல் துறை அனுமதி கிடைக்காமல் காலதாமதம் ஏற்படுகிறது.போதிய பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாததால், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சுற்றுச்சுவற்றில் துளையிட்டு, உண்டியலை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல், கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X