புதுச்சேரி:தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் கல்வியறிவு குழுமத்தின் சார்பில் 'மாதிரி தேர்தல்' நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் சுமதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர். மாதிரி தேர்தல் மூலம் தேர்தல் விழிப்புணர்வு, ஓட்டு பதிவு செய்யும் முறை மற்றும் ஓட்டுச்சாவடி அமைப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.மாதிரி தேர்தல் பணிக்குழுவில் ஆசிரியர்கள் ரகுநாதன், ஜெர்ரி ஜான் கவிதா மற்றும் ரவி ஆகியோர் வாக்குப் பதிவு அதிகாரிகளாக பணியாற்றினர். பின்னர் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணியினை அனிதா மற்றும் ரகுநாதன் செய்து பள்ளி தேர்தல் குழும மாணவர் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.