பொது செய்தி

தமிழ்நாடு

டிச.,4 சிறப்பு கடன் வழங்கும் முகாம்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை : மாம்பலம் தாசில்தார் அலுவலகத்தில், 4ம் தேதி, சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தோருக்கு, பல்வேறு திட்டங்களில் கடன் வழங்கப்பட்டுகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் பல்வேறு தாசில்தார் அலுவலகங்களில், கடன் வழங்கும் முகாம்கள் நடக்கின்றன.வரும், 4ம் தேதி, மாம்பலம் தாலுகாவிலும், அதைத்தொடர்ந்து, 6ம் தேதி, தண்டையார்பேட்டை தாலுகாவிலும் முகாம்கள் நடக்கின்றன.

இதில், அப்பகுதியைச் சேர்ந்த, மக்கள், சிறுதொழில் வியாபாரம், தொழில் துவங்க கடன் திட்டங்கள் தொடர்பான விபரங்களையும், சந்தேகங்களையும் முகாமில் பங்கேற்று தெளிவுபடுத்தி கொள்ளலாம். அதேபோல், தனிநபர்கடன், கல்விக்கடன்களுக்கு,உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பய னடையலாம் என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X