சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவலரை தாக்கிய ரவுடி கும்பலால் பரபரப்பு

Added : டிச 02, 2019
Advertisement

மாதவரம் : காவலர், அவரது சகோதரி ஆகியோரைதாக்கிய, ரவுடி கும்பலால் பரபரப்பானது.

மாதவரம் அடுத்த பெரியசேக்காட்டை சேர்ந்தவர் முத்துகுமார், 44; செங்குன்றம் காவல் நிலைய குற்றப்பிரிவில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.நேற்று மாலை, 4:30 மணிக்கு, அவர் தன் குடும்பத்தினருடன், 'மாருதி - 800' காரில், மாதவரம் நோக்கி சென்றார். அப்போது, பெரியசேக்காடு, பெருமாள் கோவில் தெரு சந்திப்பில், இரு சக்கர வாகனத்தில் வந்த, கொடுங்கையூரைச் சேர்ந்த ரவுடி வீரபத்ரன், 57, காரின்பக்கவாட்டில் மோதினார்.காரின் கதவு சேதமானது.

இது குறித்து, முத்துகுமார், ரவுடியை தட்டிக்கேட்டார். இதனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.இதையடுத்து, குடிபோதையில் இருந்த ரவுடி, மொபைல் போன் மூலம், தன் ஆதரவாளர்களை, சம்பவ இடத்திற்கு அழைத்தார்.அங்கு சென்றவர்களுடன் சேர்ந்து, காவலர் முத்துகுமாரை, வீரபத்ரன்தாக்கினார்.அவர்களை தடுக்க முயன்ற, காவலரின் சகோதரி காந்தி, 49, என்பவரையும் அவர்கள் தாக்கினர்.

பலத்த காயமடைந்த இருவரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.தலையில் காயமடைந்த வீரபத்ரன், ஸ்டான்லி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து, மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X