ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி கைது

Added : டிச 02, 2019
Advertisement
 ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி கைது

திருக்கனுார்:பைக்குகளை எரித்தவர்களை கொலை செய்ய, ஆயுதங்களுடன் திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்று பாலத்தின் கீழ் கடந்த 24ம் தேதி இரவு இரண்டு பைக்குகள் தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த திருக்கனுார் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.அதில், முன்விரோதம் காரணமாக கடந்த 24ம் தேதி பாலத்தின் கீழ் இருந்த துத்திப்பட்டு ரவுடி வெறிபிரதாப் தரப்பினரை, அருண்குமார் தரப்பினர் அடித்து விரட்டி அவர்களது பைக்குகளை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

அதன்பேரில் இருதரப்பினரையும் போலீசார் தேடிவந்தனர்.இந்நிலையில், பைக்குகளை எரித்த அருண்குமாரை கொலை செய்ய திட்டம் வகுக்க கொடாத்துாரில் உள்ள தனது நண்பர்கள் சந்துரு, அஜித் ஆகியோரை சந்தித்து பேச வெறிபிரதாப் நேற்று வந்திருந்தார்.அதனை அறிந்த திருக்கனுார் போலீசார் விரைந்து சென்று ஆயுதங்களுடன் சுற்றிய வெறிபிரதாப்பை மடக்கி பிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரது நண்பர்களான வழுதாவூர் முகிலன், கொடாத்துார் சந்துரு, அஜித் ஆகியோரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X