பொது செய்தி

தமிழ்நாடு

'டெங்கு' கொசு தொல்லை அதிகரிப்பு மெத்தனம் காட்டுகிறது மாநகராட்சி

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை : சென்னையில், கொசு தொல்லை பரவலாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, பகலில் கடிக்கக்கூடிய, 'டெங்கு' கொசு அதிகரித்துள்ளதாக, மாநகராட்சிக்கு புகார்கள் குவிகின்றன.

சென்னையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே தேங்கிய மழைநீரால், கொசு தொல்லை அதிகமாக காணப்படுகிறது.மேலும், நீர்நிலைகள், கால்வாய்களை ஒட்டிய குடியிருப்பு பகுதிகள், மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் பகுதிகளை ஒட்டிய இடங்களிலும், கொசு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.இதன் காரணமாக, மாநகராட்சி புகார் மையத்துக்கு, தினமும் சராசரியாக, 10 புகார்கள் குவிக்கின்றன. இதில், பகலில் கடிக்கக்கூடிய, 'ஏடிஸ்' டெங்கு கொசுக்கள் அதிகளவில் இருப்பதாக, பொதுமக்கள் புகாரில் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில், 1,000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக தினமும், 50க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.கண்துடைப்பு பணிஇந்நிலையில், கொசு தொல்லையை கட்டுப்படுத்த, மாநகராட்சி மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இது குறித்து, கொசு தொல்லை குறித்து புகார் அளித்தோர் கூறியதாவது:கொசு தொல்லை குறித்து புகார் அளித்த சில நாட்களில், மாநகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து தெளிக்கின்றனர்.

ஆனால், புகார் அளித்த வீட்டில் மட்டுமே, இப்பணியை மேற்கொள்கின்றனர். கொசு மருந்து புகை அடித்தாலும், தெருக்களில் அடித்து விட்டு செல்கின்றனர். நடவடிக்கைஅப்போது, கொசுக்கள் வீடுகளில் தஞ்சமடைந்து விடுகின்றன. வீட்டில் கொசு மருந்து அடிக்க, 20 முதல், 50 ரூபாய் வரை கேட்கின்றனர்.புகார் தெரிவிக்கும் பகுதி முழுவதும், கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள, மாநகராட்சி உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X