புகார் பெட்டி ..,.,

Added : டிச 02, 2019
Advertisement

சாலை சீரமைக்க வேண்டும்
புதுச்சேரி வடமங்கலம் அப்பாசாமி கம்பெனி முதல் மங்கலம் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது.குமரன், மங்கலம்குளம் துார் வாரப்படுமா?தவளக்குப்பம் முத்தாலம்மன் கோவில் குளம் துார்வாரப்படாமல் புதர்மண்டி வருகிறது.-குப்புசாமி, தவளக்குப்பம்.
நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
புதுச்சேரி பழைய பஸ்டாண்ட் உழவர்சந்தை அருகில் கழிவு நீரில் காய்கறி வியாபாரம் செய்வதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமகிருஷ்ணன், புதுச்சேரி.
தெருவிளக்கு எரியவில்லை
மூலக்குளம் மோதிலால் நகர் 3-வது குறுக்குதெருவில் கடந்த 5 மாதமாக தெரு விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது.-தேவநாதன், மூலக்குளம்.
விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் அச்சம்

மடுகரை வாணி தெருவில் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடம் புதர் மண்டி விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.-ராமமூர்த்தி,மடுகரை.

கொசு உற்பத்தி அதிகரிப்பு

நைனார் மண்டபம் மூகாம்பிகை நகர் ராமானுஜர் வீதியில் கழிவு நீர் வாய்க்காலில் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.பானுமதி, மூகாம்பிகை நகர்.
தவளக்குப்பம் முருகன் கோவில் தெருவில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.-மீனா, தவளக்குப்பம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X