பொது செய்தி

தமிழ்நாடு

ஹூமாயூன் மஹால் புனரமைப்பு மீண்டும் இயந்திரத்திற்கு மாற்றம்

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை : மாடுகள் அடிக்கடி சோர்ந்து போவதால், ஹூமாயூன் மஹால் புனரமைப்பு பணிக்கு, இயந்திரங்கள் வாயிலாக மீண்டும் சுண்ணாம்பு கலவை தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

சென்னை, சேப்பாக்கம் வளாகத்தில், 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹூமாயூன் மஹால் கட்டடம் உள்ளது. இதை, பழமை மாறாமல் புதுப்பிக்க, அரசு, 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதுபோன்ற கட்டடங்களை புனரமைக்கும் போது, அதற்கு சுண்ணாம்பு, காவிரி ஆற்று மணல், கடுக்காய், வெல்லம், தேன், தயிர் உள்ளிட்டவற்றை, 10 நாட்கள் வரை ஊறவைத்து, அதன்பின் அவற்றை கலவையாக தயாரித்து பயன்படுத்த வேண்டும். இதே பாணியில், இங்குள்ள கலச மஹால், பொதுப்பணித்துறை தலைமை அலுவலக கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, இயந்திரங்கள் வாயிலாக சுண்ணாம்பு கலவை தயாரிக்கப்பட்டது. தற்போது, காங்கேயம் இன காளை மாடுகளை பயன்படுத்தி, பொதுப்பணித்துறை வளாகத்தில், செக்கு போன்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக சுண்ணாம்பு தயாரிக்கப்பட்டு, பணிகள் துவங்கின. இயந்திரத்தால் சுண்ணாம்பு கலவை தயாரிப்பதைவிட, இது தான் பலம் என, அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால், மாடுகள் அடிக்கடி சோர்ந்து போகின்றன. இதனால், கலவை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், மீண்டும் இயந்திரத்தால் அவற்றை தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

மாடுகளை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் சுண்ணாம்பு தயாரித்து வருவதாக, அரசிடம் கணக்கு காண்பிக்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு முன்யோசனை இல்லாததால், பொதுப்பணித்துறைக்கு, 3 லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X