சென்னை : சென்னை பல்கலை மண்டல அணிகளுக்கு இடையிலான பெண்கள் கிரிக்கெட் போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி வெற்றி பெற்றது.
ஆவடி, பட்டாபிராம் பகுதி, டி.ஆர்.பி.சி.சி.சி., இந்து கல்லுாரியில், சென்னை பல்கலை மண்டல அணிகளுக்கு இடையிலான பெண்கள் கிரிக்கெட் போட்டி, சமீபத்தில் நடந்தது.இந்த போட்டியில், மொத்தம், நான்கு அணிகள் பங்கேற்றன. இதில், 'லீக்' போட்டியில், 'பி - -மண்டல ஒருங்கிணைந்த குழு' அணியை, 116 ரன்கள் வித்தியாசத்திலும், 'ஏ - மண்டல ஒருங்கிணைந்த குழு' அணியை, 64 ரன்கள் வித்தியாசத்திலும், வீழ்த்தி, நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி வெற்றி பெற்றது.மேலும், இறுதி போட்டியில், பெண்கள் கிறிஸ்டியன் கல்லுாரியை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், எம்.ஓ.பி., அணி தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.