துரைப்பாக்கம் : 'ஏடிஸ்' கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான, கட்டுமான நிறுவனத்திற்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சோழிங்கநல்லுார் மண்டலம், 193வது வார்டு, துரைப்பாக்கம் பகுதியில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடக்கிறது.நேற்று முன்தினம், சுகாதார அதிகாரிகள் பணித்தளத்தை ஆய்வு செய்தனர். இதில், டெங்கு பரப்பும், 'ஏடிஸ்' கொசுப்புழு உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, கட்டுமான நிறுவனத்திற்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.