சென்னை : தெற்கு வட்டார மண்டலங்களைச் சேர்ந்தோர், மாநகராட்சி அலுவலகங்களில். தேவையற்ற மின்னணு பொருட்களை அளிக்கலாம்.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:தெற்கு வட்டார அலுவலகத்திற்குட்பட்ட, வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், பொதுமக்களிடமிருந்து, மின்னணு கழிவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், டிச., 10ம் தேதி வரை, மின்னணு கழிவு பொருட்களை வழங்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement