பொது செய்தி

தமிழ்நாடு

விளக்கம் தரும், 'பின்கோடு'

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019
Advertisement

தமிழகம் மற்றும் நாட்டின் பிரபலமான பகுதிகளின், அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில், பிரசித்தி பெற்ற உணவு வகைகள், கலை, கலாசாரம், வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டடங்கள், ஆன்மிக வழிபாட்டு தலங்கள் போன்ற பல தகவல்கள், 'பின்கோடு' என்ற நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.

'வேந்தர் டிவி'யில் ஞாயிறுதோறும் பகல், 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை, முத்துராஜ் தயாரிக்க, பாண்டியன் தொகுத்து வழங்குகிறார்.கடந்த வாரம், துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் தசரா விழா உருவான கதை, சூரசம்ஹாரம் கடல் சார் உணவு வகைகள் குறித்த பதிவு இடம்பெற்று இருந்தது. பின்கோடு நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில், இரவு, 7:00 மணிக்கு ஒளிபரப்புகின்றனர்.மக்களுக்காக, 'உரிமைக்குரல்'மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில், 'சத்தியம் டிவி'யில் ஒளிப்பரப்பாகும், 'உரிமைக்குரல்' நிகழ்ச்சி, ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாலை, 6:30 மணிக்கும், மறுஒளிபரப்பு ஞாயிறு இரவு, 7:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சமூக பிரச்னைகள், உண்மைச் சம்பவங்கள், அரசியல் மாற்றம், கிடப்பில் உள்ள திட்டங்கள், மக்களின் ஏமாற்றம், கோபம் போன்ற மக்களின் உள்ளக்குமுறல்களை, உலகிற்கு எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சியே உரிமைக்குரல். நிகழ்ச்சியை, ஸ்டெல்லா மற்றும் சுரேஷ்ராஜன் தொகுத்து வழங்குகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X