மானாமதுரை, டிச.2-மானாமதுரை 4 வழிச்சாலையில் ரயில்வே கேட் மேம்பாலம் அருகே அவசரகால இரும்பு படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.
மதுரை - ராமநாதபுரம் இடையே 4 மற்றும் இரு வழிச்சாலை அமைக்கப்பட்டன. இதில் மதுரை - பரமக்குடி வரை 937 கோடி ரூபாயில் 4 வழிச்சாலை அமைத்துள்ளனர். இதில் சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, கமுதக்குடி உட்பட 9 இடங்களில் மேம்பாலம் கட்டியுள்ளனர். அவசர காலங்களில் மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள பகுதிக்கு வர மேம்பாலம் அருகே இரும்பு படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.
மானாமதுரை பைபாஸ் ரயில்வே கேட் அருகே பயணிகள் அதிகம் வந்து செல்வதால், அவசர காலத்தில் பயன்படுத்த படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.இது குறித்து நெடுஞ்சாலை ஆணைய அலுவலர் கூறியதாவது, மேம்பாலத்தில் விபத்து, அசம்பாவிதம் நேரிட்டால் பயணிகள் தப்பிக்க ஏதுவாக, இப்படிக்கட்டுகள் அமைத்துள்ளோம், என்றார்.