சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் மழைக்கு 4 வீடுகள் சேதம்

Added : டிச 02, 2019
Advertisement
 சிவகங்கையில் மழைக்கு 4 வீடுகள் சேதம்

சிவகங்கை:மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி காளையார்கோவிலில் அதிகபட்சமாக 66.6 மி.மீ., மழை பதிவானது. இரவு, பகலாக தொடர்ந்து பெய்த மழைக்கு சிவகங்கை, காரைக்குடியில் 4 வீடுகள் சேதமானது.மாவட்ட அளவில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.

கடும் பனி பொழியும் கார்த்திகையில் தொடர் மழை பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு சிவகங்கை, கொட்டகுடியில் சுப்பிரமணியன் 53, என்பவரது ஓட்டு வீடு சுவர் இடிந்து சேதமானது. சிவகங்கை சி.பி.,காலனியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், அவற்றை அப்புறப்படுத்த முடியாமல் மக்கள் தவித்தனர்.

அதிகபட்சம் காளையார்கோவிலில் 66.6, குறைந்தபட்சமாக மானாமதுரையில் 25.1 மி.மீ., மழை பதிவானது.காரைக்குடி:காரைக்குடியில் பெய்த மழைக்கு இது வரை 10 பேரின் வீடுகள் சேதமானது. சத்யாநகர், காளவாய்பொட்டல், பாதரக்குடியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால் காந்திபுரம் முதல் வீதி, மேட்டுதெருவை சேர்ந்த தனுஷ்கோடி, பாக்கியம், நாகராஜ் ஆகியோரின் வீட்டு சுவர்கள் இடிந்து சேதமானது.

வீடுகளுக்குள் மழை நீர் புகும் முன் நகராட்சி அதிகாரிகள் மழை நீர் செல்லும் கால்வாய்களை புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.திருப்புத்துார்:தொடர் மழைக்கு ஆலம்பட்டி - திருக்களாப்பட்டி ரோட்டில் படியான் கோயில் அருகே இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டிஅகற்றியதால் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. இந்த ஒன்றியத்தில் உள்ள 482 கண்மாய்களில் 60 சதவீத தண்ணீர் தேங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X