சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை (மாஸ்டர் ஹெல்த் செக்கப்) மையம் ஏற்படுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைக்கு தினமும் 1,300 வெளிநோயாளிகள் வருகின்றனர். இதில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, ரத்தஅழுத்தம், இருதய கோளாறு காரணமாக 200 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்நோய்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இ.சி.ஜி., ஸ்கேன், ரத்தம், சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ள கூறுகின்றனர். இதனால், காலையில் டாக்டரை சந்திக்கும் நோயாளிகள், அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை முடித்து, ரிசல்ட்டை வாங்கி மீண்டும் டாக்டரை பார்க்க மதியம் 12:00 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. அதற்குள் டாக்டர்கள் பணி முடிந்து சென்றுவிட்டதாக கூறுகின்றனர்.
இதனால் பரிசோதனை அறிக்கையை உடனுக்குடன் காண்பித்து, உரிய மருந்து, மாத்திரை எடுக்க முடியாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். எனவே இங்கு எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன், இ.சி.ஜி., மிஷின், ரத்த, சிறுநீர் பரிசோதனை கருவி வசதியுடன் முழு உடல் பரிசோதனை மையம் ஏற்படுத்தி, அங்கு இருதய நோய் பிரிவு டாக்டர்களை நியமித்து, மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். சிவகங்கை அமைச்சர் பாஸ்கரனும், சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE