சுப்ரமணியபாரதி பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுப்ரமணியபாரதி பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Added : டிச 02, 2019
Share
புதுச்சேரி:திருக்கனுார் சுப்ரமணியபாரதி மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறையின் சார்பில் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.துவக்க விழாவில் பள்ளி முதல்வர் சம்பத் வரவேற்றார். புதுச்சேரி தீயணைப்புத்துறை அதிகாரி ரித்தோஷ்சந்ரா தலைமை தாங்கி தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாமை துவக்கி
 சுப்ரமணியபாரதி பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி:திருக்கனுார் சுப்ரமணியபாரதி மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறையின் சார்பில் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

துவக்க விழாவில் பள்ளி முதல்வர் சம்பத் வரவேற்றார். புதுச்சேரி தீயணைப்புத்துறை அதிகாரி ரித்தோஷ்சந்ரா தலைமை தாங்கி தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து பேசினார்.திருக்கனுார் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் முன்னிலையில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயி்ற்சி நடந்தது. தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்து இருந்து தற்காத்து கொள்ளும் முறை குறித்து 'செயல்முறை மூலம் ஒத்திகை' நடந்தது.பள்ளி துணை முதல்வர் சுசீலாசம்பத் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X