நடவடிக்கை! கழிவு நீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய : செயற்கை கோள் உதவியை நாடியது மாநகராட்சி | Dinamalar

தமிழ்நாடு

நடவடிக்கை! கழிவு நீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய : செயற்கை கோள் உதவியை நாடியது மாநகராட்சி

Added : டிச 02, 2019 | கருத்துகள் (1)
நடவடிக்கை! கழிவு நீர் குழாய் உடைப்புகளை  சரி செய்ய : செயற்கை கோள்  உதவியை நாடியது மாநகராட்சி

மதுரை:மதுரை மாநகராட்சியில் தீர்க்க முடியாத பிரச்னைகளான குடிநீர், கழிவுநீர் குழாய் உடைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க செயற்கைக்கோள் உதவியை நிர்வாகம் நாடியுள்ளது.

நகரில் உள்ள பிரதான, பகிர்மான குடிநீர் குழாய்கள் மிக பழமையானவை. அதிக அழுத்தத்தால் அடிக்கடி குழாய்களில் உடைப்பு ஏற்படுவது வாடிக்கை. தினமும் நுாற்றுக்கும் அதிகமான இடங்களில் லேசான கசிவு முதல் பெரிய அளவில் உடைப்பு மூலம் பெருமளவு குடிநீர் வீணாகிறது. மாநகராட்சி பழைய 72 வார்டுகளில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்களிலும் அடிக்கடி கசிவு, உடைப்பு ஏற்படுவது மாநகராட்சிக்கு தலைவலியாக இருக்கிறது.

ஒரே இடத்தில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் உடையும்போது இரண்டும் கலந்தன. இதனால் பல வீடுகளில் குழாயில் கழிவுநீர் வருகிறது. இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தனியார் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியுள்ளது. அந்த நிறுவனம் வார்டு வார்டாக ஆய்வு பணியை துவங்கியுள்ளது.

சோதனைரீதியாக ஒரு வார்டில் நிறுவனம் ஆய்வை முடித்துள்ளது. இது நல்ல பலனை தந்துள்ளது.அதிகாரிகள் கூறியதாவது: செயற்கைக்கோள் உதவியுடன் தெருக்கள், குடிநீர், கழிவுநீர் குழாய்கள், ரோடுகள் உள்ளிட்டவற்றை படம் பிடிக்கின்றனர். கசிவு ஏற்படும் பகுதியை துல்லியமாக கணித்து பதிவு செய்கின்றனர். இது கசிவு,உடைப்பை உடனுக்குடன் சரி செய்ய உதவும். நீண்ட காலத்திற்கு பலன் அளிக்கும் திட்டம் என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X