அதிகாரிகளின் அஜாக்கிரதையால் வீணான ரூ.70 லட்சம்: பயன்பாட்டிற்கு வராத உசிலம்பட்டி நகராட்சி கட்டடம்

Added : டிச 02, 2019
Advertisement
 அதிகாரிகளின் அஜாக்கிரதையால் வீணான ரூ.70 லட்சம்: பயன்பாட்டிற்கு வராத உசிலம்பட்டி  நகராட்சி கட்டடம்

உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.இந்நிலையில் உள்ளாட்சிகளின் தற்போதைய நிலை என்ன, கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்கள் என்ன, தற்போதுஉள்ளாட்சிஅமைப்புகளில்மக்களை வாட்டி வதைக்கும் முக்கியபிரச்னைகள் என்ன, வார்டுகளில் அடிப்படை வசதிகள்எந்தளவுக்கு உள்ளன என உள்ளாட்சி அமைப்புகளை ரவுண்ட் அப் செய்த போது கிடைத்த தகவல்கள்...

உசிம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகளில் 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 1995 ஆண்டு உசிலம்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை நான்கு உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்துள்ளது.

நகராட்சிக்காக ரூ. 70 லட்சத்தில் 2008 ல் குப்பைக் கிடங்கு அருகில் கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரவில்லை. அதிகாரிகளின் திட்ட மிடல் இன்றி கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா காணாமல் சிதைந்து வருகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது. நகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை இல்லை. கோடை காலங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது.

தற்போது திடக் கழிவு மேலாண்மைக்காக யு.வாடிப்பட்டியில் குப்பைக்கிடங்கு, பேரையூர் ரோட்டில் நுண்ணுாட்ட உரம் தயாரிப்பு மையம் அமைக்கும் பணி நடக்கிறது. நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு எட்டு மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. வைகை அணையில் இருந்து 24 வார்டுகளுக்கு மட்டும் ரூ. 73 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் துவங்கியுள்ளன.பாதாள சாக்கடை, புதிய பஸ் ஸ்டாண்ட், புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என நகராட்சிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

குடியிருப்போர் கூறியதாவது...

சிதையும் ரோடுகள்

தேவராஜ், வழக்கறிஞர்: 24 வார்டுகளிலும் சமீபத்தில் தான் தார் ரோடுகள் போடப்பட்டுள்ளன. நந்தவனம் தெரு உள்ளிட்ட சில தெருக்களில் போர்டுகள் மட்டும் வைத்துள்ளனர். ஆனால் ரோடு பணிகள் நடக்கவில்லை. ஆனந்தநகர் முதல் தெருவில் வடிகால் வசதி செய்யாமல் ரோடு போட்டுள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. வில்லாணி ரோடு, கவணம்பட்டி ரோடு அமைத்த சில மாதங்களுக்குள் சிதைந்து வருகிறது.

கண்மாயில் கழிவுநீர்

பாலமுருகன், வர்த்தகர்:

நகராட்சி முன்புள்ள தெருக்களில் சாக்கடை களுக்கு தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. பெரிய வாகனங்கள் இத்தெருக்களில் செல்லும் போது விபத்திற்குள்ளாகின்றன. சாக்கடை கழிவுநீர் உசிலம்பட்டி கண்மாயில் கலக்கிறது. சாக்கடை கழிவுகள் கலக்காமல் தடுக்க வேண்டும். கண்மாயில் மழைநீரை தேக்கினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

தட்டுபாடின்றி குடிநீர்

ஜான்சன், விவசாயி:

குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கியிருந்த நகராட்சியில் சில ஆண்டுகளாக தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 24 வார்டுகளிலும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. குப்பையை முறையாக அகற்ற வேண்டும். பாதாள சாக்கடை வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகள்

சோலைராஜா, வழக்கறிஞர்:

கவணம்பட்டி ஊருணிகளில் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இதற்கு தீர்வு காணவேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க தொடர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். உசிலம்பட்டி சாக்கடை கழிவுகள் மதுரை ரோட்டில் கொங்கபட்டி ஊருணியில் கலக்கிறது. அதையும் தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X