தமிழ்நாடு

இங்கேயே 'ஊட்டி!' காலநிலை 'குளுகுளு' : இரவு பகலாக மழை

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019
Advertisement
 இங்கேயே 'ஊட்டி!' காலநிலை 'குளுகுளு' : இரவு பகலாக மழை

திருப்பூர்:திருப்பூரில் இரவும், பகலும் பெய்த மழையால், 'குளுகுளு' காலநிலை நிலவியது.தமிழகத்தில் கடந்தஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது இன்னும் மூன்று தினங்களுக்கு, மழை பெய்யும் என, வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.மழை மறைவு மாவட்டமான திருப்பூரில், நேற்றுமுன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று இரவு வரை நீடித்தது.
ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ரோடுகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.ஆற்றுப்பாசன நீரோடைகளில் அதிகளவில் தண்ணீர் பாய்ந்தும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
இது ஒருபுறமிருக்க, அவிநாசி, திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதிகளில், துாரலுடன் மழை பெய்து கொண்டே இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.நேற்று விசேஷ நாள் என்பதால், பொதுமக்கள் வாக னங்களை ஓட்டிச் செல்ல முடியாமல் தவித்தனர்.சிலர் மழையை பொருட்படுத்தாது சென்றனர். பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மழைவெள்ளம் தேங்கி நின்றதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த மட்டில், நேற்றுமுன்தினம், அதிகபட்சமாக அவிநாசியில், 31 மி.மீ., மழை பதிவானது. அதேபோல், திருப்பூர் வடக்கு, 11.10 மி.மீ., மூலனுார், 10 மி.மி., குண்டடம், 20 மி.மீ., திருப்பூர் தெற்கு, 11 மி.மீ., மடத்துக்குளம், 15 மி.மீ., அமராவதி அணை, 29 மி.மீ., திருமூர்த்தி அணை, 16 மி.மீ., என, மாவட்டத்தில், சராசரியாக, 13.34 மி.மீ., அளவில் மழை பதிவானது.ஊட்டியைப் போன்ற 'குளுகுளு' காலநிலை நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X