பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை உற்பத்தி முடக்கம்

Added : டிச 02, 2019
Advertisement

பொங்கலுார், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கொப்பரை உற்பத்தி தொழில் பெருமளவில் நடக்கிறது. கொப்பரை உற்பத்திக்கு நல்ல வெயில் அவசியம். கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது மழை பெய்தாலும் பகல் நேரத்தில் வெப்பம் நிலவியது. எனவே, கொப்பரை உற்பத்தி முற்றிலும் முடங்கவில்லை. தற்போது, இரண்டு நாட்களாக இடைவிடாது அடைமழை பெய்து வருகிறது. இதனால், கொப்பரை உற்பத்தி தொழில் தற்காலிகமாக முடங்கியுள்ளது. உலர் களங்களில் வேலை செய்த தொழிலா ளர்கள் வேலை இழந்துள்ளனர்.வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்யும். இதனால் கொப்பரை உற்பத்தி குறைந்து விடும். எனவே, இதை எதிர்பார்த்து கொப்பரை விற்பனையை தள்ளி வைப்பது வழக்கம். இந்த ஆண்டு கொப்பரை உற்பத்தி சீராக இருப்பதால் விலை அதிகரிக்கவில்லை. தற்போது ஒரு கிலோ, 100 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. மழை நீடிக்கும் பட்சத்தில் உற்பத்தி நின்று விடும். இதனால், விலை உயர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X