அனுப்பர்பாளையம்;திருப்பூர், அவிநாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனி பகுதியில் இருந்து, 40 மாணவிகள் அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அனைவருக்கும் அரசின் இலவச பஸ் பாஸ் உள்ளது.மாணவிகள் காலை வழக்கம்போல் பள்ளி செல்ல தண்ணீர் பந்தல் காலனி பஸ் ஸ்டாப் வந்து நிற்கும்போது, அந்த நேரத்தில் வரக்கூடிய எண் 9, 12, 32 ஆகிய அரசு பஸ் நிற்பதில்லை.மாணவிகள் தனியார் பஸ்சில், பணம் கொடுத்து செல்ல வேண்டியுள்ளது. மாணவிகள், கண்ணீர்மல்க கூறியதாவது:தனியார் பஸ்சில் சென்றால், புது பஸ் ஸ்டாண்டில் இறங்கி பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.