பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 94,877 விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம்: வேளாண் இணை இயக்குனர் தகவல்

Added : டிச 02, 2019
Advertisement
 மாவட்டத்தில் 94,877 விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம்: வேளாண் இணை இயக்குனர் தகவல்

தமிழகத்தின் மழை மறைவு மாவட்டமான மதுரையில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ
மழைகள் கை கொடுத்தால் மட்டுமே விவசாயம் செழிப்பாக இருக்கும். இம்மாவட்டத்தில்
தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் கிணற்று நீர் பாசனம் மூலம் விவசாயிகள் நெல், கரும்பு சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

திருமங்கலம், சேடபட்டி பகுதியில் சிறுதானியங்கள், பருத்தி சாகுபடி அதிகம் நடக்கிறது. கோடை வெயில் வெளுத்து கட்டும் நிலையிலும் கோடை மழையை பயன்படுத்தி சிறுதானியங் கள், பருத்தி, எண்ணெய் வித்துக்கள் இங்கு மானாவாரியாக பயிரிட்டு விவசாயிகள் சாதனை படைக்கின்றனர். இவர்களை ஊக்குவித்து, மானியங்களை வேளாண்மைத்துறை வழங்கி
வருகிறது.

இத்துறையின் செயல்பாடுகள், விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து இணை இயக்குனர் இளங்கோவன் அளித்த சிறப்பு பேட்டி...

வறட்சி பகுதியாக மாறிய மதுரையில் விவசாய மேம்பாடு சாத்தியமா?

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயத்தில் லாபம் ஈட்ட முடியும். இதற்காக நுண்ணுயிர் பாசன சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு 2019 - 20 ஆண்டில் ரூ.18 கோடியே 95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிணறு ஒரு புறம், பாசன பரப்பு ஒரு புறம் இருந்தால் நிதி கிடைக்காது. இத்திட்டத்தில் ஆழ்துளை கிணறு, மின் மற்றும் டீசல் மோட்டார் அமைத்தல், தொட்டி கட்டுதல், குழாய் பதிக்க மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கான பிரதமர் நிதியுதவி திட்டம் குறித்து?

இந்த நிதியாண்டு 2019 - 20ல் பிரதமர் விவசாயி நிதியுதவி திட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 672 பேரில் 94 ஆயிரத்து 877 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் மூன்று கட்டங்களாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 15 ஆயிரத்து 795 பேரின் ஆதார் அட்டையில் பெயர், வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள பெயர் வித்தியாசத்தை சரி செய்யும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும் அவரவர் வங்கி கணக்கில் இந்நிதி வரவு வைக்கப்படும்.

பயிர் காப்பீடு செய்தோருக்கு ஓராண்டுக்குள் இழப்பீடு கிடைக்குமா?

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 2016-17ல் செப்டம்பர் 'ரபி' பருவத் தில் துவக்கப்பட்டது. தற்போது வரை பதிவு செய்த 59 ஆயிரம் பேரில் 28 ஆயிரத்து 900 பேருக்கு ரூ.55 கோடியே 99 லட்சம் இழப்பீட்டு வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.

இந்த நிதியாண்டு 2019-20ல் பயிர் காப்பீடு எத்தனை விவசாயிகள் செய்துள்ளனர்?

இந்நிதியாண்டு சம்பா பருவத்திற்கு ஆயிரத்து 153 எக்டேர் பரப்புக்கு 3,012 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். ஏனைய பயிர்களுக்கு காப்பீடு செய்யும் பணி நடக்கிறது.

வேளாண் விரிவாக்க திட்டங்கள் குறித்து?

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் உற்பத்திக்கு ரூ.134 கோடியே 39 லட்சம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறுதானிய உற்பத்திக்கு ரூ. 77 லட்சத்து 81 ஆயிரம், பயறு வகை உற்பத்திக்கு ரூ. 99 லட்சத்து 88 ஆயிரம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்கு ரூ. 34 லட்சத்து 15 ஆயிரம், பருத்தி உற்பத்திக்கு ரூ.60 லட்சத்து 7 ஆயிரம், மரப்பயிர் உற்பத்திக்கு ரூ.4 லட்சத்து 71 ஆயிரம், பருத்தி செயல் விளக்கத்திடல் அமைக்க ரூ.5 லட்சத்து 70 ஆயிரம், பருத்தி விதை விநியோகத்துக்கு ரூ.13 லட்சத்து 41 ஆயிரத்து 700, தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை உற்பத்திக்கு ரூ.87 லட்சத்து 500 ரூபாய், தென்னை பராமரிப்புக்கு ரூ.11 லட்சத்து 28 ஆயிரத்து 400, சான்று விதை வினியோக திட்டத்துக்கு ரூ. 37 லட்சத்து 45 ஆயிரம், சேடபட்டி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்துக்கு ரூ. ஒரு கோடி என பல்வேறு நிதி இத்திட்டங்களில் பெறப்பட்டுள்ளது.

பிரதமர் விவசாயிகள் ஓய்வூதியம் யாருக்கு பொருந்தும்?

இத்திட்டத்தின் கீழ் 18 - 40 வயது விவசாயிகள் பயன்பெறலாம். மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.

40 வயதுக்கு மேற்பட்ட விவசாயிக்கு ஓய்வூதியம்?

இத்திட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாரிசுகள், குடும்பத்தினர் பயன்பெறலாம்.

ஓய்வூதியம் பெற எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர்? ஓய்வூதியம் பெற 18 ஆயிரம் பேர் தகுதியானர்கள். அவர்களில் 3,400 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

உற்பத்தி அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளீர்களா?

இந்த நிதியாண்டு 2019 - 20ல் நெல் 44,526 எக்டர், சிறுதானியம் 23,581 எக்டர், பருப்பு வகை 8,497 எக்டர், பருத்தி 6,423 எக்டர், கரும்பு 3,813 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 3,565 எக்டர் என உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தேவையான மழை கிடைத்துள்ளதால் 2020 மார்ச்சிற்குள் இந்த இலக்கை எட்ட முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X