* மோசமான ரோடால் அவதி
மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் அருணாசலம் தெருவில் ரோடு குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீரில் பள்ளம் இருப்பது தெரியாமல் டூவீலர்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர். ரோட்டை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.
- பிரியா, எஸ்.எஸ்.காலனி.
* ஆக்கிரமிப்பால் நெரிசல்
மதுரை தமிழ் சங்கம் ரோட்டின் இரு புறமும் வாகனங்களை கண்டபடி நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசாரும் வாகனங்களை ஒழுங்கு படுத்த முன்வருவதில்லை. வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். விபத்து அபாயமும் உள்ளது.
- ஜோசப், சிம்மக்கல்.
* நாய்கள் தொந்தரவு
மதுரை அய்யர்பங்களா எம்.எம்.எஸ்.காலனி, எழில்நகர், நாகனாகுளம் பகுதிகளில் ஏராளமான நாய்கள் திரிகின்றன. ரோட்டில் செல்வோரை விரட்டி கடிக்கின்றன. குழந்தைகள் வெளியில் வர அச்சப்படுகின்றனர். நாய்களை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- லட்சுமிநாராயணன், அய்யர்பங்களா.
* வழிப்பறி அபாயம்
மதுரை திருநகரில் தணக்கன்குளம் செல்லும் வழியில் தாலுகா அலுவலகம் உள்ளது. ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்றனர். வழியில் இரவு தெரு விளக்குகள் எரியாமல் இருட்டுமயமாக உள்ளது. நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி அபாயம் உள்ளது.
- ராஜ்குமார், தணக்கன்குளம்.