பொது செய்தி

தமிழ்நாடு

நெல், தென்னையில் நோய் தாக்குதலா கட்டுப்படுத்த வழிகள் இருக்கின்றன

Added : டிச 02, 2019
Advertisement

இந்தாண்டு பருவ மழை ஓரளவு கை கொடுக்க மதுரை மாவட்டத்தில் விவசாய பணிகள்
தீவிரமாக நடக்கின்றன. மேலுார், வாடிப்பட்டி, உசிலம்பட்டி உட்பட மாவட்டத்தில் பரவலாக நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களில் நோய்
தாக்குதல் ஏற்படும் நிலையுள்ளது

நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் உதவி இயக்குனர் மதுரைசாமி கூறியதாவது...

நெல் பயிரில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த காப்பர் ைஹட்ராக்சைடு மருந்தை 500 கிராம் அல்லது 120 கிராம் ஸ்டெப்டோ மைசின் சல்பேட் டெட்ராசைக்ளின் கலவை மருந்து மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்துடன் கலந்து மாலை நேரங்களில் தெளிக்கலாம். தேவைப்பட்டால் மீண்டும் 15 நாட்கள் கழித்து தெளிக்கவேண்டும்.

சூரிய விளக்கு பொறி

நெற் பயிரில் குலை நோய் இலையில் தோன்றி பின் கண் வடிவப் புள்ளிகளாக மாறி சாம்பல் நிறத்தில் காணப்படும். நோயை கட்டுப்படுத்த அசோக்ஸிடிரஸ்ரோப்பின் 25 மருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 மி.லி.,அல்லது டிரைசைக்ளோசோல் 200 கிராம் என்ற அளவில் தேவையான ஒட்டு பொருளுடன் கலந்து தெளிக்கலாம். பூச்சிகளை கட்டுப்படுத்த சூரிய விளக்கு பொறி அமைக்கலாம்.

வெள்ளை ஈ தாக்குதல்

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலிதீன் தாட்கள்களில் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள் 5 அடி நீளம் 1.5 அடி அகலம் என்றளவில் ஏக்கருக்கு பத்து என்ற எண்ணிக்கையில் ஆறடி உயரத்தில் ஆங்காங்கு தொங்க விட்டும் தென்னை மரத்தின் மீது கட்டியும் பூச்சிகள் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க இலை மட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புறம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும்.

கிரைசோபிட் இரை விழுங்கிகள்

இப்பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்டேருக்கு 1000 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும். இந்த இரை விழுங்கிகள் பூச்சியியல் துறை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் கோவை, பெங்களூர் தேசிய பூச்சி பாதுகாப்பு மையங்களில் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X