பொது செய்தி

இந்தியா

ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : டிச 02, 2019
Advertisement
 ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி:அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நவீன ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். மருத்துவ அதிகாரி பிரியங்கா தேவி, பெண் சுகாதார மேற்பார்வையாளர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி தாரணி தலைமை தாங்கி, ஆண் குடும்ப கட்டுப்பாடு முறைகள் பற்றியும், அதன் பயன்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.ஆலோசகர் சின்னத்தம்பி, குடும்ப கட்டுபாட்டு திட்டத்தில் ஆண்களின் பங்கே நன்று என்ற தலைப்பில் பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜெகநாதன் மற்றும் பன்னீர்செல்வம் ஆண்களுக்கான நவீன எளிய முறை குடும்ப நல அறுவை சிகிச்சை முறைகள் குறித்து பேசினர். சுகாதார உதவி ஆய்வாளர் திலகவதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X