தொழிலதிபர் வீட்டில் 10 சவரன் தங்க காசு திருட்டு

Added : டிச 02, 2019
Advertisement

புதுச்சேரி:தொழிலதிபர் வீட்டில் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 10 சவரன் தங்க நாணயங்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

உழவர்கரை, நண்பர்கள் நகர், 4வது குறுக்கு வீதியைச் சேர்ந்தவர் சங்கரமூத்து. தொழிலதிபர். இவரது மனைவி ஜெயந்தி, 57. இவரது மகன் டில்லியில் வேலை செய்து வருகிறார். மகனை பார்ப்க்க சென்றிருந்த தம்பதி இருவரும் ஒரு மாதத்திற்கு பின் கடந்த வாரம் புதுச்சேரிக்கு வந்தனர்.கடந்த 28 ம் தேதி, வீட்டிலிருந்த தங்க நாணயங்களை விற்பதற்காக பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 10 சவரன் தங்க நாணயங்கள் திருடு போயிருந்தது.இது குறித்து ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, அவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X