ஜி.எஸ்.டி., இழப்பீடு ரூ.400 கோடி தராமல் காலதாமதம்: மத்திய அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு 

Added : டிச 02, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரிக்கு, ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரையில், 4 மாதங்கள் தர வேண்டிய ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகை ரூ.400 கோடியை மத்திய அரசு தராமல் காலம் தாழ்த்தி வருகிறது என, முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறியது:புதுச்சேரி மாநிலத்திற்கு, ஜி.எஸ்.டி., வரியினால் ஏற்படும் இழப்பீடு 2 மாதங்களுக்கு ஒருமுறை, மத்திய அரசு நமக்கு தர வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் வரை 4 மாதங்கள் சேரவேண்டிய நிதி ரூ.400 கோடி இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.இது தொடர்பாக, மாநில நிதி அமைச்சர்களின் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் சென்னையில் இருந்து நான் பேசினேன், உடனடியாக புதுச்சேரி மாநிலத்திற்கு தர வேண்டிய நான்கு மாத நிதியை தர வலியுறுத்தினேன்.புதுச்சேரியில் வணிகவரி, கலால் வரி, போக்குவரத்து துறை வரியை தவிர வேறு வருவாய் இல்லை. இந்த வருவாய் மூலமே மக்கள் நலத்திட்டங்கள், அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கு பயன்படுத்துகிறோம். எனவே உடனடியாக மத்திய அரசு ஜி.எஸ்.டி., நிதியை வழங்க வேண்டும்.ரங்கசாமி முதல்வராக இருந்தபோது வாங்கிய கடனில் ரூ.500 கோடியை டிசம்பர் 5ம் தேதிக்குள் கட்ட வேண்டும். மார்ச் 2019ம் ஆண்டு ரூ.300 கோடி ஏற்கனவே கட்டியுள்ளோம்.இந்திய அரசின் சட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றத்தின் அடிப்படையில் நிதியை மத்திய அரசு தர வேண்டும். புதுச்சேரியில், பெண்கள் பாதுகாப்புக்காக தனியாக ஒரு குழுமை அமைத்து அதன் மூலம் பெண்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.புதுச்சேரியில் ரவுடிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும், படுகொலை செய்வதுமான சம்பவங்கள் நடந்துள்ளது.

ரவுடிகளை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.சுமார் 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளனர். நம்முடைய மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட வேண்டிது அரசின் கடமை. அதை தவறாமல் அரசு செய்து வருகிறது.

புதுச்சேரியில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரே நாளில் 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி நிற்கிறது.நிவாரணப்பணி மேற்கொள்ள ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய், மின்சாரம், பொதுப்பணித்துறை, கல்வி, மருத்துவம், உள்ளாட்சி துறை ஆகியவை இணைந்து 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை வைக்கப்பட்டுள்ளது.அமைச்சர்களை நேரில் சென்று நிவாரண பணியை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X