சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாய்ந்த கரும்புகள் கவலையில் விவசாயிகள்

Added : டிச 02, 2019
Advertisement
 சாய்ந்த கரும்புகள் கவலையில் விவசாயிகள்

மேலுார்:மேலுார் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழைக்கு கரும்புகள் சாய்ந்ததால் விவசாயிகள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகசெங்கரும்பு விளங்குகிறது.

நேற்று காற்றுடன் பெய்த மழைக்கு அறுவடை செய்யும் நிலையில் இருந்த கரும்புகள் சாய்ந்தன. விவசாயிகள் அருணாசலம், செல்லச்சாமி, காரோலை, ராஜா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர்.விவசாயிகள் கூறுகையில், ''கரும்பு பயிரிட ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் செலவாகிறது. வங்கி கடன் பெற்று அறுவடை செய்யும் நேரத்தில் சாய்ந்ததால் செய்வதறியாது தவிக்கிறோம். வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மீதமுள்ள கரும்புகளை காக்க மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X