2020, 'ஜி - 20' மாநாடு சவுதியில் நடக்கிறது

Added : டிச 02, 2019
Share
Advertisement
ரியாத்: அடுத்த ஆண்டுக்கான, 'ஜி - 20' மாநாடு, மத்திய கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை, சவுதி அரேபியா பெற்றுள்ளது. உலகின் வளர்ச்சி அடைந்த, 20 நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 20' அமைப்பு. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா,

ரியாத்: அடுத்த ஆண்டுக்கான, 'ஜி - 20' மாநாடு, மத்திய கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை, சவுதி அரேபியா பெற்றுள்ளது.



latest tamil news



உலகின் வளர்ச்சி அடைந்த, 20 நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 20' அமைப்பு. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட, வளர்ச்சி அடைந்த நாடுகள், இந்த அமைப்பில் அங்கமாக உள்ளன.இந்த ஆண்டுக்கான, ஜி - 20 மாநாடு, ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடந்தது.


latest tamil news



இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மாநாடு, மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடக்கிறது.அடுத்த ஆண்டு, நவம்பர், 21 மற்றும் 22ல், இந்த மாநாடு நடைபெற உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X