பொது செய்தி

இந்தியா

கொம்யூன் பஞ்சாயத்துகளில் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

Added : டிச 02, 2019
Advertisement

நெட்டப்பாக்கம்:மழை பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றவும், மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டர்களை இயக்கி தடையின்றி குடிநீர் வழங்கவும், இயற்கை சீற்றங்களால் சாய்ந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், தேவையான டீசல் என்ஜின், மரம் அறுக்கும் இயந்திரம், பொக்லைன் இந்திரம், நடமாடும் குடிநீர் டேங்கர் மற்றும் தேவையான அனைத்து வாகனங்களும், உபகரணங்கள் கொம்யூன் பஞ்சாயத்துகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மழை பாதிப்புகளை தகவல் தெரிவிக்க ஏதுவாக கொம்யூன் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு, ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்;
மண்ணாடிப்பட்டு கொம்யூன்;கட்டுபாட்டு அறை - 0413-2640161; ஆணையர் 94433 64016, 97868 84401, இளநிலை பொறியாளர்கள் சாந்தன்- 93459 29245, பாஸ்கர்- 94436 16899;நெட்டப்பாக்கம் கொம்யூன்: கட்டுப்பாட்டு அறை 0413-2699108; ஆணையர் 94433 69198; உதவிப் பொறியாளர் கருத்தையன் - 9443405429, இளநிலை பொறியாளர்கள் அகிலன் 9443090149, அய்யப்பன் 9442192840, மாணிக்கசாமி 8124406785 .பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழை பாதிப்பு இருப்பின் மேற்கொண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனுக்குடன் பாதிப்புகள் நிவர்த்தி செய்யப்படும் என மண்ணாடிப்பட்டு மற்றும் நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X