பொது செய்தி

இந்தியா

சூரமங்கலத்தில் மண் தடுப்பு அகற்றம்

Added : டிச 02, 2019
Advertisement
 சூரமங்கலத்தில் மண் தடுப்பு அகற்றம்

நெட்டப்பாக்கம்:சூரமங்கலத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை தமிழக போலீசார் உதவியுடன் மண் தடுப்பை அகற்றி வெளியேற்றப்பட்டது.

நெட்டப்பாக்கம் அடுத்த சூரமங்கலம் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால், மழை நீர் கால்வாயில் கழிவு நீர் கலந்து செல்கிறது. இந்த கால்வாய் சாலைக்கு எதிர்புரம் உள்ள தமிழக பகுதியான கொத்தாம்பாக்கம் கால்வாய் வழியாக சென்றதால் அப்பகுதி மக்கள் கால்வாயை மண்ணை கொட்டி தடுத்துவிட்டனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், மழை நீர் வெளியே செல்ல வழியின்றி கிராம பகுதியை சூழந்து கொண்டிருந்தது. மழை நீடித்ததால் நேற்று மழை நீர் வீடுகளுக்குள் சென்றது.இதையடுத்து நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையர் மனோகர், தாசில்தார் குமரன் ஆகியோர் சூரமங்கலம் பாலத்தின் உள்ள மண் தடுப்பை அகற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொத்தாம்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம், நெட்டப்பாக்கம் மற்றும் கண்டமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் மண் தடுப்பை அகற்றி மழை நீரை வெளியேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X