பொது செய்தி

இந்தியா

அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டடம்: பேரவை கூட்டத்தில் முடிவு

Added : டிச 02, 2019
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில், புதிய கட்டடம் கட்ட பொது பேரவை கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பொது பேரவை கூட்டம் கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. சங்க தலைவர் மனோரன் தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். இயக்குனர்கிருஷ்ணன்
 அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டடம்: பேரவை கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி:புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில், புதிய கட்டடம் கட்ட பொது பேரவை கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பொது பேரவை கூட்டம் கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. சங்க தலைவர் மனோரன் தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். இயக்குனர்கிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் 275க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தணிக்கை அறிக்கையின்படி லாபம் பங்கீடு செய்யப்பட்டது. பங்கு ஈவுத் தொகை உறுப்பினர்களுக்கு வழங்க ஒப்புதல் பெறப்பட்டது.மேலும்இக்கூட்டத்தில் சங்கத்திற்கு சொந்தமான புதிய கட்டடம் கட்டுதல், உறுப்பினர்கள் இறக்க நேரிட்டால் இறப்பு சேம நல நிதியின் மூலம் தற்போது 3 லட்சமாக வழங்கப்பட்டு வருவது 5 லட்சமாக வழங்கி, அவர்களது கடன் ஈடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதை பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் சங்க துணை தலைவர் பொற்செழியன், இயக்குனர்கள்முல்லைவாணன், செந்தில்குமார், டேவிட் சாலமன் ராயன், ஜெயபிரகாஷ், சிவபிரகாசன், ரகுராமன், கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி முதல்வர் சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X