மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு

Added : டிச 02, 2019
 மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு

புதுச்சேரி:புதுச்சேரியில் கன மழையால் பாதித்த பகுதிகளை அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டு, மழை நீரை விரைந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் இடைவிடாது பெய்த கனமழையால், நகர முக்கிய சாலைகள் வெள்ளக்காடானது. தாழ்வான நகர்களி்ல மழை நீர் சூழ்ந்த, வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். சாலையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதித்தது.முதல்வர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.அதன்படி அமைச்சர் நமச்சிவாயம், மழை நீர் சூழ்ந்த இந்திரா சதுக்கம், பூமியான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து, தண்ணீரை வெளியேற்றவும், போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்திரா சிக்னல் பகுதியில் சாலையில் இறங்கி போக்குவரத்து சீரமைப்பிலும் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறுகையில், பொதுப்பணித்துறை சார்பில் வடிகால்கள் துார்வாரப்பட்டதால் பெரிய அளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.இருந்தும் அதிக அளவிலான மழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கியது. அதை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் ஷாஜகான், ஜான்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு, மழை நீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலெக்டர் அருண், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் பொதுப்பணித்துறை, மின் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். உழவர்கரை பகுதியில் மழை நீர் சூழ்ந்த பாவாணர் நகர், மேரி உழவர்கரை, தியாகுபிள்ளை நகர், மூலக்குளம், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளை துணை சபாநாயகர் பாலன் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துாரிதப்படுத்தினார்.
மேலும், மழைநீர் சூழ்ந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, பால் பாக்கெட்டுகள் வழங்கினார்.முத்தியால்பேட்டையில் மழை நீர் சூழ்ந்த திருவள்ளுவர் நகர், மதுரைவீரன்கோவில் தோப்பு, செட்டிகுளம், புதுப்பாளையம், ரங்கவிலாஸ் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ.,வருவாய்த்துறை அதிகாரிகளுடன் மோட்டார் பைக்கில் சென்று பார்வையிட்டார்.பின்னர் மழை நீர் சூழ்ந்த பகுதி மக்களை் பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோன்று வில்லியனுார் பகுதியில் மழையால் பாதித்த ஜி.என்.பாளையம், கோட்டைமேடு, மூர்த்தி நகர், பைபாஸ் பிருந்தாவனம் நகர் உள்ளிட்ட பகுதிகளை சப் கலெக்டர் ஷஷ்வத் ஷவுரப்தலைமையில் தாசில்தார் மகேந்திரன், வருவாய்துறைஅதிகாரிகள் பார்வையிட்டு மீட்பு மற்றம் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X