பொது செய்தி

தமிழ்நாடு

நாடு முன்னேற்றமடைய பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

Added : டிச 02, 2019
Advertisement

மதுரை:''நாடு முன்னேற்றமடைய மாணவர்கள் அயராது பாடுபட வேண்டும்,'' என, மதுரை அரசு சட்டக்கல்லுாரி தேசிய சட்ட நாள் மற்றும் எல்.எல்.பி., எல்.எல்.எம்., முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழாவில் உயர்நீதிமன்றம் நீதிபதி கோவிந்தராஜ் பேசினார்.

கல்லுாரி முதல்வர் ஜெயகவுரி வரவேற்றார். நீதிபதி கோவிந்தராஜ் பேசியதாவது: படிக்கும் காலங்களில் நல்ல பண்புகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். பேராசிரியர்களுடன் மரியாதை கலந்த நட்புடன் பழக வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க சட்ட மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.

முன்னாள் முதல்வர் அழகர்சாமி, உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கடேசன், மூத்த பேராசிரியை ராஜலட்சுமி, ஜேம்ஸ் ஜெயபால் பேசினர். பேராசிரியர் குமரன் நன்றி கூறினார். என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் ராஜா, தமிழ்மணி, வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X