வில்லியனுார்:அரியூர் உலக வாழியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.வில்லியனுார் அடுத்த அரியூரில் அமைந்துள்ள உலக வாழியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 26ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து தினசரி கால பூஜை மற்றும் தீபாராதனை நடந்து வந்தது.நேற்று காலை 5:30 மணிக்கு யாகசாலை பூஜையை தொடர்ந்து, யாத்ராதானம், கடம் புறப்பாடாகி காலை 7:30 மணியளவில் ஐயனார், சப்தகன்னிகளுக்கு கும்பாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதனை தொடர்ந்து காலை 9:30 மணியளவில் யாத்ராதானம், கடம் புறப்பாடாகி விமானம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சுகுமாறன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.