பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு சீற்றம்: திருமூர்த்திமலையில் அரசுத்துறைகள் 'அலர்ட்!'

Added : டிச 02, 2019
Advertisement
 பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு சீற்றம்: திருமூர்த்திமலையில் அரசுத்துறைகள் 'அலர்ட்!'

உடுமலை:மலைத்தொடரில் பெய்த மழையால், பஞ்சலிங்க அருவியில், நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.உடுமலை அருகே திருமூர்த்திமலையில், வனப்பகுதியில், பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உருவாகும் பல்வேறு சிற்றாறுகள், பஞ்சலிங்கம் அமைந்துள்ள பீடத்தின் அருகில், ஒருங்கிணைந்து, பஞ்சலிங்க அருவியாக கொட்டுகிறது. அருவியிலிருந்து வெளியேறும் நீர் சிற்றாறாக மாறி, மலை அடிவாரத்தில், மும்மூர்த்திகள் தலமான, அமணலிங்கேஸ்வரர் கோவிலை ஒட்டி திருமூர்த்தி அணைக்கு செல்கிறது.நேற்றுமுன்தினம் இரவு மலைத்தொடரில் பெய்த மழையால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, இந்து அறநிலையத்துறையினர், நேற்று காலை முதல் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடைவிதித்தனர்.பிற மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு அருவி மற்றும் ஆற்றில் இறங்க தடை குறித்து, கோவில் பணியாளர்கள் 'மைக்' மூலம் அறிவிப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்து அறநிலையத்துறையினர் கூறுகையில், 'மழைக்காலத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக பஞ்சலிங்க அருவிக்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அதற்கான 'அலர்ட்' அதிகாரிகளுக்கு செல்லும் வகையில் கட்டமைப்புகள் உள்ளது. அதே போல், மாவட்ட நிர்வாக வழிகாட்டுதல்களும் உடனடியாக மைக் மூலம், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X