புதுச்சேரி:கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1998-2000ம் கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜாராமன் தலைமை தாங்கினார். வணிகவியல் முதுகலை ஆசிரியர் சவுந்தர்ராஜன், தொழிற்கல்வி ஆசிரியர் செல்வம் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் அசோக் வரவேற்றார்.1998 ம் கல்வியாண்டில் பணியாற்றிய ஆசிரியர்கள் சேதுராமன், வெங்கடகிருஷ்ணன், ராஜசேகர், ஜெயலட்சுமி, வேலையன், காசிநாதன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராமனுக்கு முன்னாள் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பள்ளிக்கு 10 சேர்கள், 33 சில்வர் குடங்கள், 20 டியூப் லைட், ஒரு பீரோ உள்ளிட்டவைகள் வழங்கினர்.முன்னாள் மாணவர் ராஜி நன்றி கூறினார்.