பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வறட்சி நீங்க பெய்யென பெய்யும் மழை!

Added : டிச 02, 2019
Advertisement
  நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வறட்சி நீங்க பெய்யென பெய்யும் மழை!

உடுமலை:தொடர் மழையால், உடுமலை சுற்றுப்பகுதியில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது; அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், நேற்றுமுன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று பகலில் தீவிரமாக பெய்தது.
தொடர் மழையால், நகரின் பல்வேறு இடங்களில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, உடுமலை நகரில், 9.60 மி.மீ., அமராவதி அணைப்பகுதி, 29 மி.மீ., திருமூர்த்தி அணைப்பகுதி 16; நல்லாறு, 20 மி.மீ., பெதப்பம்பட்டி, 7 மி.மீ., என்றளவில் மழையளவு பதிவாகியிருந்தது.நேற்று பகலிலும் தொடர்ந்த மழையால், நகரிலுள்ள கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகிய மழை நீர் ஓடைகளில், கழிவு நீரோடு, மழை நீர் கலந்து வெள்ளமாக சென்றது.தேசிய நெடுஞ்சாலை மற்றும் தாராபுரம் ரோடு, திருமூர்த்திமலை ரோட்டில், மழை நீர் அதிகளவு தேங்கியதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறியபடி அந்த ரோட்டில் சென்றனர். சாரலாக தொடர்ந்த மழையால், விடுமுறை நாளிலும், நகரில் மக்கள் நடமாட்டம் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது. வீடுகளிலேயே மக்கள் முடங்கி, அவர்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.பாசன பகுதிகளில் சிக்கல் பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து பிரதானக்கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனப்பகுதியில் மழையால், மக்காச்சோளம், பருத்தி மற்றும் காய்கறி சாகுபடி விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், கிளை வாய்க்கால்களில், தண்ணீர் முழு கொள்ளளவில் சென்றும் யாருக்கும் பலன் இல்லாத நிலை காணப்பட்டது. சில பகுதிகளில், பாசன நீரை வீணடிக்காமல், கிராம குளங்களுக்கு திருப்பி விட்டு, நிரப்பி வருகின்றனர்.அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நீர்வரத்து முழுவதும் அணையில் தேக்கப்பட்டு வருகிறது. மழையால், விடுமுறை நாளிலும், அணைப்பூங்காவுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்து, களையிழந்து காணப்பட்டது.
வருவாய்த்துறையினர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையால், இதுவரை பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், கிராமங்களில் கனமழை பொழிவால், குடியிருப்புகளில் வெள்ளம் புகும் நிலை இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வி.ஏ.ஓ.,க்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.அணைகள் நீர்மட்டம், நீர்வரத்து நிலவரம் குறித்த விபரங்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X