மதுரை:மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நெற் பயிரில் நீர்ப்பாசனம் முறை குறித்த பயிற்சி நரசிங்கம்பட்டியில் நடந்தது.
கல்லுாரி பயிர் நோயியல் துறை தலைவர் எபனேசர் தலைமை வகித்தார். தோட்டக்கலைத் துறை தலைவர் பாலமோகன் முன்னிலை வகித்தார். இணைப் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார். வாழையில் துல்லிய பண்ணைய முறையை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் நன்மை, வாழைக்கன்றுகளை தேர்வு செய்யும் நுட்பம், திசு வளர்ப்பு, வாழைக் கன்றுகளின் பயன்கள், சொட்டு நீர் மூலம் உரங்கள் இடுதல் குறித்து விளக்கப்பட்டது.
நெல் வயல்களில் நீர் குழாய் அமைத்து பாசனம் குறித்து மண்ணியல் துறை துணை பேராசிரியர் பிரபாகரன் விளக்கினார். ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச்சியாளர்கள் விக்னேஷ், பாலமுருகன், பிரேமா உள்ளிட்டோர் செய்தனர்.