பொது செய்தி

தமிழ்நாடு

நாகதேவி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

Added : டிச 02, 2019
Advertisement

உடுமலை:உடுமலை பழனியாண்டவர் நகர் நாகதேவி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.கோவிலில், கும்பாபிேஷக விழா நவ., 29ல்,கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம், முதற்கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை, 6:30 மணி முதல் விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி, நாடி சந்தானம், கலசங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர், நாககன்னிக்கும், கருப்பணசுவாமிக்கும், சப்த கன்னிகளுக்கும், கும்பாபிேஷகம் நடந்தது. அதையடுத்து, மகா அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X