பொது செய்தி

இந்தியா

கனமழையை சமாளிக்க வடிகால்கள் தேவை

Added : டிச 02, 2019
Advertisement
 கனமழையை சமாளிக்க வடிகால்கள் தேவை

புதுச்சேரி:புதுச்சேரியில் கனமழையை சமாளிக்கும் அளவில் வடிகால் வசதி இல்லாததால், ஆண்டுதோறும் மழையின்போது, நகரம் வெள்ளக்காடாவது தொடர்கிறது.
புதுச்சேரியில் கடற்கரையொட்டிய ஒயிட் டவுன் பகுதியில் மட்டுமே, தண்ணீர் தேங்காமல் வடிகால்கள் மூலம் உடனடியாக வடிந்து வருகிறது. ஆனால், நகரின் பிற பகுதிகள் விரிவடைந்துள்ள நிலையில், மழைநீர் வெளியேற்ற போதுமான அளவில் வடிகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பழைய வடிகால்களை அடிக்கடி துார்வாரினாலும் பயனில்லாத நிலையே உள்ளது.சாதாரண மழைக்கே நகர வீதிகள் வெள்ளக் காடாக மாறிவிடுகிறது. தாழ்வான நகர் பகுதிகள் தண்ணீர் தேங்கி குளமாக மாறுவதும், மின்மோட்டார் மூலம், தண்ணீரை வெளியேற்றுவதும் ஆண்டு தோறும் வாடிக்கையாக நடந்து வருகிறது.அந்த வகையில் மழைக்கு முன்பாக இந்த ஆண்டு, நகரில் உள்ள முக்கிய வடிகால்கள் பொதுப் பணித் துறை நீர்பாசன பிரிவு சார்பில் துார்வாரப்பட்டது. இருந்தும், கடந்த இரண்டு நாட்கள் வெளுத்து வாங்கிய கனமழைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால், தண்ணீர் வடிய வழியின்றி, இந்திரா சதுக்கம், மரப்பாலம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள், நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது.

சாலைகளில் வாகனங்கள் நீந்திச் சென்றன.புதுச்சேரியில் தற்போதுள்ள வடிகால்கள், சாதாரண மழையை மட்டுமே தாங்கும் அளவில் உள்ளதால், கூடுதல் மழையை தாங்கும் அளவில் வடிகால்களை மேம்படுத்தினால் மட்டுமே, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.தேங்காய் திட்டு வடிகால் அடைப்புவேல்ராம்பட்டு மற்றும் முதலியார்பேட்டை சுதானா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் முக்கிய வடிகாலாக, தேங்காய்த்திட்டு வடிகால் உளளது.இந்த வாய்க்கால், கனமழையை தாங்கும் அளவில் இல்லாதது ஒருபுறம் இருந்தாலும், முழுமையாக துார் வாரப்படாததாலும் மரப்பாலம் பகுதியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இந்த ஆண்டும், இந்த வாய்க்கால் முடிவுறும் பகுதியில் அடைப்பு அகற்றப்படாமல் ஆகாய தாமரை செடிகள் மண்டியிருப்பதால் தண்ணீர் வடியாமல் தேங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X