உடுமலை:மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முகமது முபாரக் அறிக்கை:உடுமலை, பல்லடம், திருப்பூர் மின்பகிர்மான வட்ட பகுதிகளுக்குட்பட்ட, கேங்மேன் பதவிக்கு, 2016 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இவர்களது சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் மற்றும் உடற்தகுதி தேர்வு, பழநி ரோட்டிலுள்ள உடுமலை துணை மின் நிலைய பகுதியில், இன்று, (டிச., 2ம் தேதி) துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.தொடர் மழை காரணமாக, இன்று மற்றும் நாளை, (3ம் தேதிக்கான) தேர்வுகள் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE