பொது செய்தி

தமிழ்நாடு

டி.ஆர்.இ.யூ., வலியுறுத்தல்

Added : டிச 02, 2019
Advertisement

மதுரை:'ரயில்வேயில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் உத்தரவை ரயில்வே வாரியம் திரும்ப பெற வேண்டும்,' என, தெற்கு ரயில்வே தட்சிண எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ.,) வலியுறுத்தியது.

ரயில்வே வாரிய இணை இயக்குனர் ராய் ஓய்வு பெற்றவர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கி பணியமர்த்த பொது மேலாளர் களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விளம்பரப்படுத்தி 65 வயதிற்குட் பட்டவர்களை பணியமர்த்தவும் அறிவுறுத்தி யுள்ளார். இதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

டி.ஆர்.இ.யூ., கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் கூறுகையில், ''ரயில்வே வாரிய உத்தரவு பணியில் உள்ளவர்களின் பதவி உயர்வை பாதிக்கும். படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களையும் பாதிக்கும். ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X