பொது செய்தி

தமிழ்நாடு

'அகத்தை துாய்மையாக வைத்துகொண்டால் நோய்கள் வரும் முன்னர் காக்க முடியம்'

Added : டிச 02, 2019
Advertisement

உடுமலை:''ஆத்ம சக்தியை உணர்ந்து, அகத்தை துாய்மையாக வைத்துக்கொண்டால், மனிதன் நோய்களை வரும் முன் காக்க முடியும்,'' என குருமகான் பரஞ்சோதியார் கருத்தரங்கில் பேசினார்.திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில், 'ஆயுஷா ஐகான்' நீரிழிவு நோய்க்கான மரபு சார் தீர்வுகள் என்ற தலைப்பில், நேற்று கருத்தரங்கம் நடந்தது. மத்திய அரசின் ஆயுஷ் திட்டத்தின் இயக்குனர் அனுபவ் வத்ஷா வரவேற்றார்.சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் விநாயகம் முன்னிலை வகித்தார். உலக சமாதான அறக்கட்டளை குருமகான் பரஞ்சோதியார் பேசியதாவது: நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையில், இந்தியா முன்னிலை பெற்று வருவது கவலையளிக்கிறது. அதே போல், தமிழகத்திலும், இந்நோய் பாதிப்பவர்களின் சதவீதம் அதிகரித்து கொண்டே உள்ளது.வரும் முன் காப்போம் என்பதன் அடிப்படையில், நம் முன்னோர், உடல், மனம், உயிர் ஆகியவற்றுக்கான தத்துவங்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கிய ஆயுர்வேதத்தை பின்பற்றினர்.மண்ணுக்குரிய பாரம்பரிய வாழ்வியல் முறைகளை கைவிட்டதே பல்வேறு ஆரோக்கிய கோளாறுகளுக்கு ஆதாரமாகிவிட்டது. ஆத்ம சக்தியை உணர்ந்து, உன்னுள் கடவுள் என்ற நிலைப்படி, மைய சக்தியான மூளையின் முன்பகுதியை செயல்படுத்த வேண்டும்.'அகம் மாறினால் புறம் மாறும்' என்பதே நோய்களை தவிர்ப்பதற்கான முக்கிய காரணமாகும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த, மத்திய அரசு ஆயுஷ் திட்டத்தில், அனைத்து வகை வைத்திய முறைகளையும் ஒருங்கிணைத்து வருகிறது. அதோடு மக்களும், தங்களை உணரும் தியானத்தில் ஈடுபட்டு, நோய்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, பேசினார்.கருத்தரங்கில், பல்வேறு தலைப்புகளில், மருத்துவ அலுவலர்கள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X